Sunday, 2 October 2022

Anai mukhavarku - 245 - 294

 



பாட்டு - 245 (294) - ஆனை முகவற்கு - தாள விளக்கம்




சந்தம் :

தானதன தந்த தானதன தந்த

தானதன தந்த தனதான




தாளம் :

= (தா + ன + த + ன) + (த + ந் + த) + (தா + ன + த + ன) + (த + ந் + த)

+ (தா + ன +த + ன) + (த + ந் + த) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)

+ (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 3 + 5 + 3

5 + 3 + 5 (+ 3)

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

இந்த பாட்டை விளம்ப காலத்தில், நீலாம்பரி ராகத்தில் பாடுகிறார் குருஜி.

= சதுச்ர த்ரிபுடை - 2 களை, எடுப்பு 3/4 இடம்.




பாட்டின் நடை :

இந்த பாட்டை ஒரு களையில் பாடினால், 2 களை - 3/4 இடம் என்பது = ஒரு களை - 1.5 எடுப்பு ஆகிவிடும்.

= சதுச்ர த்ரிபுடை - தேசாதி எடுப்பு.

இது எல்லோருக்கும் பழக்கமான / தெரிந்த தாள நடை.

சதுச்ர த்ரிபுடை - ஒரு களை - தேசாதி தாளத்தில் பாடுவது எல்லோருக்கும் சுலபமாக இருக்கும் என்று நம்புகிறேன்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: