பாட்டு - 033 (040) - படர் புவியின் - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தான தான தந்தன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 5 + 3 + 3 + 4
= 15 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 1.5 + 1.5 + 2
= 7.5 அக்ஷரங்கள்
= தக தகிட + தகிட + தகிட + தக திமி
குறிப்பு - தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரங்கள் - இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் (தக தகிட + தகிட + தகிட + தக திமி) ஆக குருஜி அமைத்துள்ளார்.
குறிப்பு - பாட்டு முடிக்கும்போது
'தம்பிரானே' என்று பாடி விட்டு, 'அகந்தை தவிர்ந்திடாதோ, வந்தருள் தம்பிரானே' என குருஜி பாடி முடிக்கிறார். இதோடு தாள நடையை பார்ப்போம்.
தக தகிட தகிட தகிட - தம்பிரானே
தக திமி - அகந்தை
தக தகிட தகிட தகிட - தவிர்ந்திடாதோ
தக திமி - வந்தருள் என்று பாடிவிட்டு,
தம்பிரானே - முழு தாளம் போட்டு முடிக்கவேண்டும்.
தாளம் விடியோவை பார்க்கவும்.
தாளம் வீடியோ:
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment