பாட்டு - 108 (128) - கனைத்தத் அதிர்க்கும் - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தத்தனத் தந்த தாத்தன தந்ததான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த் + த) + (த + த் + த + ன + த்) + (த + ந் + த) + (தா + த் + த + ன) + (த + ந் + த + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1)
= 4 + 5 + 3 + 5 + 6
= 4 (- 1) + 5 (+ 1) + 3 + 5 (- 1) + 6 (+ 1) **
= 3 + (3 + 3) + 3 + 4 + 7
= 12 + 4 + 7
தாளம் - மத்யம காலம் :
= 6 + 2 + 3.5
= (4 x 1.5) + 2 + (1.5 + 2)
= நாலு திச்ரம் + த்ருதம் + மிச்ர சாப்பு
= தகிட + தகிட + தகிட + தகிட + தக திமி + தகிட தக திமி
குறிப்பு - தாள நடை :
இந்த தாளத்தை மற்றும் ஒரு வழியில் போடலாம்.
= 4 + 5 + 3 + 5 + 6 என்பதை
= 4 + 5 (-1) + 3 (+1) + 5 (-1) + 6 (+1)
என்று மாற்றினால், பாட்டின் நடை
விளம்ப காலத்தில் 4 + 4 + 4 + 4 + 7 என்றும்.
மத்யம காலத்தில் (4 + 2 + 2) + 3.5 என்றும் ஆகும்
= சதுச்ர த்ரிபுடை + மிச்ர சாப்பு
இரண்டு தாள வகைகளையும் தாளம் வீடியோவில் பார்க்கலாம்.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment