பாட்டு - 125 (150) - உடுக்கத் துகில் - தாள விளக்கம்
சந்தம் :
தனத்தத் தனதான தானன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த் + த + த்) + (த + ன + தா + ன) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1)
= 5 + 5 + 4
= (3 + 2) + (2 + 3) + 4
= [(3 + 2) + (2)] + [(3) + 4]
= (3 + 4) + (3 + 4)
தாளம் - மத்யம காலம் :
= (1.5 + 2) + (1.5 + 2)
= மிச்ர சாப்பு
= தகிட தக திமி
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7 அட்சரமும் உள்ள
தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.
மத்யம காலத்தில் 7 அக்ஷரம் = 2 x மிச்ர சாப்பு.
குறிப்பு - பாட்டை முடிக்கும்போது :
நாலாவது 'பாராவை' பாடி அடுத்து 'கதிர்காமம் மேவிய பெருமாளே' என்று பாடி முடிக்கிறார்.
'ஒரு நாளே' = ஒரு மிச்ர சாப்பு + இரண்டாவது மிச்ர சாப்பு-வில் ‘தகிட தக’ போட்டுவிட்டு,
'கதிர்' என்பதை 'திமி' யில் போட்டுவிட்டு, 'காம-மேவிய' என்பதை ஒரு மிச்ர சாப்புவில் போட்டுவிட்டு, 'பெருமாளே' என்பதை 2 மிச்ர சாப்பு தாளத்தில் பாடுகிறார் குருஜி.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment