Tuesday, 27 September 2022

Ethu buDDhi aiyyA - 106 - 125

 



பாட்டு - 106 (125) - ஏது புத்தி ஐயா - தாள விளக்கம்




சந்தம் :

தான தத்தன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன) + (த + த் + த + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2

= தகிட தக திமி

= மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம் - இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும், மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் ஆக

அமைத்துள்ளார் குருஜி.

மத்யம காலம் 7 அக்ஷரம் = 2 x மிச்ர சாப்பு.




குறிப்பு - பாட்டை முடிக்கும் விதம் :

குருஜி 'பாதம் வைத்திடையா, நகைத்தவர் கண்கள் காண, பாதம் வைத்திடையா' என்று

பாடி முடிக்கிறார்.

'பாதம் வைத்திடையா' என்ற வார்த்தைகளை இரண்டு மிச்ர சாப்பு தாளத்தில் பாடிவிட்டு,

அடுத்த தாளத்தில் 'தகிட' போட்ட பிறகு 'தக திமி' தாளத்தில் 'ந கைத்தவர்' என்ற வார்த்தையில் 'கை' சமத்தில் வருமாறு பாடி,

'கண்கள் காண' என்ற வார்த்தைகளை ஒரு முழு 'மிச்ர சாப்பு'வில் சமத்தில் பாடிவிட்டு,

'பாதம் வைத்திடையா' என்ற வார்த்தைகளை 'மிச்ர சாப்பு'வில் சமத்தில் பாடி முடிக்கிறார்.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: