பாட்டு - 096 (113) - ஓர் உரு ஆகிய - தாள விளக்கம்
அறிமுகம் :
திரு-ஏழு-கூற்றிருக்கை எனும் நடையில் / பாணியில் எழுதப்பட்ட இந்த பாட்டின் சந்தம் கிடைக்கவில்லை.
அதனால், பாட்டின் வார்த்தைகளை வைத்து குருஜி இந்த பாட்டிற்கு தாளத்தை அமைத்துள்ளார்.
சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை - எடுப்பு 3/4 இடம்
தனிப்பட்ட குறிப்பு :
திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த நானும் என் மனைவியும் திருப்புகழ் இசை வழிபாடு என்ற இயக்கத்தில் சேருவதற்கு காரணமாக இருந்த பாட்டு இது.
தமிழும் சங்கீதமும் முறைப்படி கற்காத நாங்கள், முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு நாள் குருஜியின் பிரதான சீடரான தாரா மாமியும் அவரது சிஷ்ய கணங்களும் சேர்ந்து கானடாவில் உள்ள டொராண்டோ என்ற ஊரில் ஒரு ஷஷ்டி அன்று இந்த பாட்டை பாடிக்கேட்டது முதல் நாங்கள் இருவரும் தாரா மாமியிடம் திருப்புகழ் கற்க தொடங்கினோம். அந்த பயணம் இன்றும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
சந்தம் மிகுத்த திருப்புகழை அடியேனும் உலகில் சிறிது பரவ தெரிசித்த அனுக்ரஹத்துக்கு
குருஜி ஸ்ரீ ராகவனுக்கும் தாரா மாமிக்கும் எங்கள் மனமார்ந்த வணக்கத்தை கூறுவதை தவிர
வேறு ஒன்றும் சொல்லமுடியாத / எழுத முடியாத நிலையில் இந்த பாட்டை நாங்கள்
முருகப் பெருமானுக்கே சமர்ப்பிக்கிறோம்.
தாளம் வீடியோ
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment