பாட்டு - 132 (159) - தேனுந்து முக்கனிகள் - தாள விளக்கம்
சந்தம் :
தானந் தனத்ததன தானந் தனத்ததன
தானந் தனத்ததன தனதான
(பாட்டின் முதல் வரி இந்த சந்ததிற்கு விதிவிலக்கு.)
தாளம் - விளம்ப காலம் :
= (தா + ன + ந்) + (த + ன + த் + த + த + ன) + (தா + ன + ந்) + (த + ன + த் + த + த + ன)
= 4 + 6 + 4 + 6
= 4 (+ 1) + 6 (- 1) + 4 (+ 1) + 6 (- 1) **
= 5 + 5 + 5 + 5
தாளம் - மத்யம காலம் :
= 2.5 + 2.5 + 2.5 + 2.5
= தக தகிட
= கண்ட சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 5 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும், மத்யம காலத்தில் 5 அக்ஷரமும் உள்ள
தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.
மத்யம கால 5 அக்ஷரம் = 2 x கண்ட சாப்பு.
குறிப்பு - பாட்டை முடிக்கும் பொழுது :
நாலாவது வரியில் 'அருள்வாயே' என்று பாடிவிட்டு, 'குறத்தி மகிழ் பெருமாளே' என்று பாடுகிறார் குருஜி.
'அருள்வாயே' - இரண்டு கண்ட சாப்பு -வில் பாடி, 'ற' -வில் அடுத்த அடி வருமாறு 'குறத்தி மகிழ் பெருமாளே' என்று பாடி முடிக்க வேண்டும்.
தாளம் வீடியோ.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment