பாட்டு - 048 (058) - அருத்தி வாழ்வோடு - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தானன தனதன தனதன தனதான
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + த் + த) + (தா + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 +1) + (1 + 1 + 2 + 1)
= 4 (-1) + 4 + 4 + 4 + 5 (+1) **
= 21 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 1.5 + 2 + 2 + 2 + 3
= 10.5 அக்ஷரங்கள்
= தகிட + தக-திமி + தக-திமி + தக-திமி + தக-திமி-தக
தாளம் போடவேண்டிய விதம் :
குருஜி, முதல் அடியை தகிட என்று போட்டு, இதை மிச்ர ஜம்பை தாளம் ஆக பாடலாம் என கூறியிருக்கார்.
மிச்ர ஜம்பை தாளம் = மிச்ர லகு (l-7) + அநுத்ருதம் (U) + த்ருதம் (O) = 7 + 1 + 2
மிச்ர லகு = அடி + ஆறு விரல் = 7 அக்ஷரம்
இதில், முதல் அடியை தகிட என போட்டால்
= (1.5 + 6) = 7.5 அக்ஷரம் உள்ள தாளம் ஆகும்.
இதோடு U (அநுத்ருதம்) + O (த்ருதம்) சேர்த்தால்,
= 7.5 + 1 + 2 = 10.5 அக்ஷரம் உள்ள தாளம் ஆகிவிடும்.
குறிப்பு - தாள நடை :
இந்த பாட்டின் தாளத்தை
மிச்ர சாப்பு (1.5 + 2 = 3.5) + சதுச்ர ஜம்பை (4 + 1 + 2 = 7)
ஆக போட்டாலும் 10.5 அக்ஷரங்கள் உள்ள தாளம் கிடைக்கும்.
குறிப்பு - தொங்கல் :
மிச்ர ஜம்பை ஆக போட்டாலும்,
மிச்ர சாப்பு + சதுச்ர ஜம்பை ஆக போட்டாலும்,
தொங்கலுக்கு U + O - அடி + அடி - வீச்சு
என்று போடவேண்டும் - திச்ர ஏகம் ஆக அல்ல.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment