பாட்டு - 069 (081) - பகர்தர்க் அரிதான - தாள விளக்கம்
சந்தம் :
தனனத்தன தான தந்தன
தாளம் - விளம்ப காலம் :
= (த + ன + ன + த் + த + ன) + (தா + ன) + (த + ந் + த + ன)
= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)
= 6 + 3 + 4
= 13 அக்ஷரங்கள்
தாளம் - மத்யம காலம் :
= 3 + 1.5 + 2
= 6.5 அக்ஷரங்கள்
= தக திமி தக + தகிட + தக திமி
= 3 + 3.5
= திச்ர ஏகம் + மிச்ர சாப்பு
குறிப்பு - தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் - இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து
விளம்ப காலத்தில் 13 அக்ஷரமும், மத்யம காலத்தில் 6.5 அக்ஷரமும் உள்ள
முழு தாளம் ஆக (திச்ர ஏகம் + மிச்ர சாப்பு) அமைத்துள்ளார் குருஜி.
குறிப்பு - முடிக்கும்பொழுது
முடிக்கும்போது, 'பெருமாளே' எனும் வார்த்தைக்கு
'திச்ர ஏகம் + தகிட' என்று தாளம் போட்டுவிட்டு,
'வந்தருள்' எனும் வார்த்தையை 'தக திமி' எனும் தாளத்தில் பாடி
'புரிவாயே' எனும் வார்த்தையை முழு தாளத்தில் பாடுகிறார் குருஜி.
தாளம் வீடியோ :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment