பாட்டு 019 (025) - காலனார் வெங்கொடும் - தாள விளக்கம்
சந்தம் :
தானனா தந்தனம் தானனா தந்தனம்
தானனா தந்தனம் தனதான
தாளம் : விளம்ப காலம் :
= (தா + ன + னா) + (த + ந் + த + ன + ம்) + (தா + ன + னா) + (த + ந் + த + ன + ம்)
+ (தா + ன + னா) + (த + ந் + த + ன + ம்) + (த + ன + தா + ன)
= (2 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1)
+ (2 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 5 + 5 + 5
+ 5 + 5 + 5 (+5) = 40 அக்ஷரங்கள்
(தொங்கலுக்கு 5 அக்ஷரத்தை குருஜி சேர்த்து தாளத்தை போட்டுள்ளார்.)
தாளம் : மத்யம காலம் :
= 2.5 + 2.5 + 2.5 + 2.5
+ 2.5 + 2.5 + 2.5 + 2.5 = 20 அக்ஷரங்கள்
= 4 x (2.5) + 2 x (2.5) + 2 x (2.5)
= l-4 + O + O - கண்ட நடையில்
= சதுச்ர லகு + த்ருதம் +த்ருதம் - கண்ட நடையில்
= சதுச்ர த்ரிபுடை - கண்ட நடையில்
குறிப்பு : சஹானா ராகம் :
இந்த பாட்டை சஹானா ராகத்தில் பாடும்பொழுது,
- தோகைமேல் கொண்டுமுன் வரவேணும் - எனும் எட்டாவது வரியை குருஜி இன்னொரு வாட்டி பாடுமாறு அமைத்துள்ளார்.
இந்த ஒருவரி பாடும்பொழுது, சதுச்ர த்ரிபுடை தாளத்தில் பாதி தாளத்தோடு அந்த வரி முடிகிறது.
அடுத்த வரி - 'ஆலகாலம் பரன் பால தாகஞ்சிடும்', இரண்டு த்ருதத்தோடு துடங்குகிறது.
இதற்கு பதிலாக இந்த பாட்டை சதுச்ர ஏகம் - கண்ட நடையில் பாடினால், ஒவ்வொரு வரியும் முழு தாளத்தில் முடிவடையும்.
ஆக, சதுச்ர ஏகம் - கண்ட நடையில் பாடினால் தாளம் போட சுலபமாக இருக்கும்.
குறிப்பு - திலங் ராகம் :
திலங் ராகத்தில் பாடினால் மேல் கூறிய பிரசினை கிடையாது.
திலங் ராகத்தில் பாடும்பொழுது சதுச்ர த்ரிபுடையிலோ சதுச்ர ஏகத்திலோ கண்ட நடையில் இந்த பாட்டை பாடலாம்.
தாளம் வீடியோ:
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment